a

ஒரே ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ்… கிளிக் செய்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!


இன்றைய நவீன உலகில் பண மோசடி எனபது மிகவும் எளிதான ஒன்றாகி விட்டது. நன்றாக படித்தவர்களாக இருந்தாலும் பணம் நிறைய வருகிறது என்றால் அதை குறித்து விசாரிக்காமல் ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவம் தான் கோயம்பேடு பகுதியில் நடந்துள்ளது. சென்னை கோயம்பேடு பாரதி அவென்யூ பகுதியில் வசிப்பவர் பூஜா (22).

இவர் தனது செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ் ஒன்றை நம்பி ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஏமாந்ததாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அப்புகாரில், “நான் சில தினங்களுக்கு முன்பு தான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடிவருகிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய செல்போனிற்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.

Also Read  நாளை விடிய விடிய மகா சிவராத்திரி கொண்டாட்டம் – ஆயத்தமாகும் சிவன் கோயில்கள்

அந்த எஸ்எம்எஸ்சில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் ஒரு மணி நேரத்துக்கு 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கிடைக்கும் என இருந்தது. அதோடு அதில் ஒரு லிங்கும் கொடுக்கப்பட்டு புராசஸ் செய்ய அதை கிளிக் செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருப்பது.

நானும் அதன்படி கிளிக் செய்யும் போது செல்போன் செயலி ஒன்று டவுன்லோட் ஆனது. அதில் குறிப்பிட்டு இருந்தபடி ஆன்லைன் மூலம் என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை அனுப்பினேன்.

Also Read  டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

ஆனால் அதன்பின் அந்த எஸ்எம்எஸ்சில் குறிப்பிட்டபடி பணம் எதுவும் வரவில்லை. அந்த ஆப்பை ஓப்பன் செய்த போது ஓபன் ஆகவில்லை. அதன்பின் அந்த லிங்கை ஆய்வு செய்தபோது அது ஒரு மோசடி என தெரியவந்தது.

தயவு செய்து என்னை நூதன முறையில் ஏமாற்றியவர்களை கண்டுபிடித்து பணத்தை திரும்ப மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பூஜாவிடம் ஆசையை ஏற்படுத்தி பணத்தை நூதன முறையில் ஏமாற்றிய செல்போன் செயலி குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசாரிடம் உதவி கேட்டுள்ளனர் கோயம்பேடு போலீசார்.

இதுகுறித்து அண்ணாநகர் காவல் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், “இதுபோன்ற நெருக்கடி காலகட்டத்தில் பணம் தேவைப்படும் நபர்களை குறிவைத்து மோசடி கும்பல்கள் சில பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறது.

Also Read  நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்; அசத்திய கோவை தம்பதி!

எனவே செல்போன் நம்பருக்கு வரும் எஸ்எம்எஸ் லிங்குகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கள்ளகாதலை கைவிட வலியுறுத்தி அக்காள் தங்கை செய்த ஆவேச செயல்…

VIGNESH PERUMAL

வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

தேர்தலை பயன்படுத்தி பழிக்கு பழி வாங்கி இளைஞரை கொலை செய்த கும்பல்…

VIGNESH PERUMAL

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ

Tamil Mint

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

வாக்குச் சேகரிப்புக்கு அலைக்கழிக்கப்பட்ட விஜயகாந்த் – ஓட்டு போட வராதது ஏன்…?

Devaraj

தமிழக அரசில் அடுத்தடுத்து அதிரடி…! புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்..!

sathya suganthi

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree