வான்டெட்டாக சிக்கிய வாலிபர் – காவலர் மீது சாக்கடை நீரை வீசி போதையில் அலப்பறை!


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த கல்லத்தி குளம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (27). இவர் சென்னையில் உள்ள டீ கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த கிராமத்திற்கு சென்று உள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான அசோகன் தினமும் குடித்துவிட்டு பிரச்சனை ஈடுபடுவதையும் சாலையில் செல்வோரை தாக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Also Read  "தமிழ்கூறும் நல்லுலகம்": சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

கடந்த 22ஆம் தேதி அதே ஊரை சேர்ந்த அய்யாதுரை என்பவரை போதையில் அசோகன் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அய்யாதுரை சின்ன கோவிலன் குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய காவலர் பாலகிருஷ்ணன் அசோகன் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அப்போதும் போதையில் இருந்த அசோகன் காவலரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Also Read  பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

இதனால், அசோகனின் குடும்பத்தாரை விசாரிக்க ஆரம்பித்துள்ளார் காவலர். அப்போதும் போதையில் தகராறு செய்துள்ளார்.

ஆனால், அதையெல்லாம் சட்டைசெய்யாத காவலர் தொடர்ந்து விசாரித்துள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த அசோகன் காவலரின் பணியை தடுக்கும் வகையில் அவர் மீது அருகிலிருந்த சாக்கடை சேற்றை எடுத்து வீசியுள்ளார்.

மேலும் காவலரின் வாகனத்தையும் தாக்கியதுடன் அவரின் தலைக்கவசத்தையும் தூக்கி வீசியுள்ளார். இதை அடுத்து காவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கொடுத்த புகாரையடுத்து அசோகன் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போதையின் உச்சத்தில் இருந்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அசோகனின் போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  தீபாவளிக்கு கிட்டத்தட்ட 15,000 சிறப்பு பேருந்துகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த அசத்தல் பரிசு…!

Lekha Shree

கண்கலங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…! உணர்ச்சி பெருக்கில் கோபாலபுர இல்லம்…!

sathya suganthi

சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

”இந்த கிறுக்கன் கிட்ட ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தின் நிலை” – ட்விட்டரை அலறவிடும் சசிகலா!

Jaya Thilagan

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் இழுத்து சென்ற கொடூரம்…

VIGNESH PERUMAL

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! – கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Tamil Mint

வருகிறார் சசிகலா

Tamil Mint

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint