“இப்படியெல்லாமா யோசிப்பாங்க?” – குக்கரை மணந்து 4 நாளில் விவாகரத்து செய்த வாலிபர்..! இதுதான் காரணமா?


திருமணங்களில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், தன்பாலின திருமணம் என பலவகை உண்டு. இவ்வளவு ஏன் அண்மையில் ஒரு பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட செய்தியை கூட கேட்டிருப்போம்.

ஆனால், ஒரு வாலிபர் குக்கரை திருமணம் செய்து அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். இதுபோதாதென்று நான்கே நாட்களில் அந்த குக்கரை விவாகரத்தும் செய்துள்ளார். இந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read  உலகின் மிக விலை உயர்ந்த ’தங்க’ பிரியாணி! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தோனேசியாவில் கொய்ரில் அனன் என்பவர் தான் ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். அந்த குக்கருக்கு மணப்பெண் போல் அலங்காரம் எல்லாம் செய்து திருமணம் முடித்து அதன் தலையில் முத்தமும் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், குக்கரை சட்டப்படி மணந்த ஆவணங்களையும் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில், “நன்கு சமைக்க தெரிந்த பெண்” என்ற கேப்ஷனை பதிவிட்டிருந்தார். இதில் ஹைலைட் என்னவென்றால் அவர் அந்த குக்கரை 4 நாட்களில் விவாகாரத்து செய்ததுதான்.

அதற்கு அவர் கூறிய காரணம், எப்போதும் ஒரே உணவை தான் அது சமைக்கிறது. எப்படி நாள்தோறும் ஒரே உணவை உண்பது என கூறி விவாகரத்து செய்துள்ளார்.

Also Read  கொரோனா 3ம் அலை தொடக்கம்? - டெல்டா வகையை போல வீரியமிக்க சி12 வகை தொற்று பரவல்..!

இது வைரல் ஆனதை அடுத்து, இதுகுறித்து பேசிய அந்த இளைஞர் தான் வைரல் ஆக வேண்டும் என்றுதான் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

இப்படி ஏதாவது வித்தியாசமாக செய்தால்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக முடியும் என்பதற்காக அந்த இளைஞர் இப்படி ஒரு விசித்திர திருமணத்தை செய்துள்ளார்.

Also Read  புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

“இப்படியெல்லாமா வைரல் ஆகணும்னு யோசிப்பிங்க” என நெட்டிசன்கள் பலர் ஆச்சரியப்பட்டு தங்களின் கலகல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ அவர் நினைத்ததை போலவே அவர் வைரல் ஆகி விட்டார்.

இனி இவர் காட்டிய பாதையில் யார் எதை திருமணம் முடிக்கப்போகின்றனரோ?


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை பரப்பியது சீனாதான் – அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

sathya suganthi

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தான்… மலாலா கவலை..!

suma lekha

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?

Tamil Mint

தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

mani maran

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள்..! வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்..!

Lekha Shree

மருமகளை மறுமணம் செய்த மாமனார்… அதிர்ச்சியில் உறைந்த மகன்..!

Lekha Shree

தலிபான் அரசின் புதிய பிரதமராக முல்லா ஹசன் தேர்வு…

suma lekha