“அது என்ன போனா இல்ல கேப்ஸ்யூலா!!” – நோக்கியா போனை விழுங்கிய இளைஞர்… மருத்துவர்கள் ஷாக்..!


இளைஞர் ஒருவர் தான் நோக்கியா போனை விழுங்கிவிட்டதாக கூறி மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோசாவா நாட்டின் ஓல்டு பிரிஸ்டினா பகுதியை சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் மருத்துவர்களிடம் தான் நோக்கியா போனை விழுங்கிவிட்டதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

Also Read  கூடி பயணிக்கும் யானைகள்…! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர் போனை விழுங்கியுள்ளது உறுதியானது. அதுவும் அவர் விழுங்கிய போன் 2000ம் ஆண்டு வெளியான கனமான நோக்கியா 3310 மாடல் போன்.

இதையடுத்து அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 பாகங்களாக இருந்த நோக்கியா போனை அவரது வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அகற்றினர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி

அந்த இளைஞர் விழுங்கிய போன் ஜீரணமாகாததால் அது அவருக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தியுள்ளது.

போனை அகற்றிவிட்டாலும் பேட்டரியில் இருந்து வெளியேறிய அமிலம் வயிற்றில் கலந்திருப்பதால் அந்த நபரின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவே அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Also Read  பிறக்கபோவது ஆணா பெண்ணா? - விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

இப்படி இளைஞர் ஒருவர் கனமாக நோக்கியா போனை விழுங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாம்பின் விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து? ஆச்சரியமூட்டும் தகவல்..!

Lekha Shree

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint

ஆப்கானிஸ்தான்: 150 இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபான்கள்..! என்ன நடக்கிறது?

Lekha Shree

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி

Tamil Mint

கியூபாவின் தடுப்பூசி 92% திறன் கொண்டது – கியூபா அரசு

Shanmugapriya

ஜப்பானில் மிரள வைக்கும் நிலச்சரிவு…! 2 பேர் பலி…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

மாற்றம் ஒன்றே மாறாதது : மெக்காவில் பாதுக்காப்பு பணியில் முதல் பெண் பாதுகாவலர்

suma lekha

வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்

Tamil Mint

புதிய ஆப்பிள் ஐபோன் அறிமுகம்

Tamil Mint

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மீன்களுக்காக கடலுக்குள் இறக்கப்படும் 40 காலி பஸ்…! இலங்கை அரசின் அசத்தல் திட்டம்…!

sathya suganthi