15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக்!


யூடியூப் தளத்தில் பிரபல சேனல்களான பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யூடியூப் கலாச்சாரம் புதிய உயரம் தொட்டுள்ளது. பல புதிய சேனல்கள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தோன்றிய வண்ணம் உள்ளன. சாட்டிலைட் சேனல்கள் போல் அல்லாமல் யூடியூப் சேனல்களில் மக்கள் வித்தியாசமான கண்டெண்டுகளையே எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றார் போல யூடியூப் சேனல்களின் வளர்ச்சியும் இருந்து வருகின்றது. அதில் சோதனைகள், பரிதாபங்கள் போன்ற சேனல்கள் தமிழ்நாட்டில் டிரெண்ட் செட்டர்களாக உருவெடுத்துள்ளன.

Also Read  செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு புதிய விதி அறிவிப்பு…!

காமெடி வீடியோக்கள், அரசியல் கலாய் செய்திகள், பிக்பாஸ் வீடியோக்கள், கான்செப்ட் வீடியோக்கள் பல இந்த சேனல்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூடியூப் யூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. அதேபோல் சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற சேனல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் தமிழ்நாட்டில் அதிக சப்கிரைப்பர்ஸ் இருக்கும் யூடியூப் சேனல்கள் ஆகும். ஒரே இரவில் இந்த சேனல்கள் மொத்தமாக ஹேக் ஆகியுள்ளது.குக் வித் கோமாளி கனி ஆகியோரின் குக்கிங் சேனல் உட்பட சில சமையல் தொடர்பான சேனல்களும் முடக்கப்பட்டு இருக்கிறது.

Also Read  செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் ஷாக்.

இதுவரை வெளியான விவரங்களின் படி 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக மர்ம நபர்களால் இந்த சேனல்கள் முடக்கப்பட்டது பல்வேறு சந்தேங்களை எழுப்பி உள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனல்களில் எல்லாம் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கிரிப்டோகரன்சி தொடர்பான குழு ஒன்று ஹேக்கிங்கை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சி

அதாவது கிரிப்டோகரன்சிக்கு விளம்பரம் தரும் வகையில் இந்த சேனல்களை ஹேக் செய்து இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. முடக்கப்பட்ட சேனல்கள் அனைத்திலும் முகப்பு பக்கத்தில் கிரிப்டோகரன்சியின் விளம்பரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த சேனல்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Also Read  யூடியூப் பார்த்து பிரசவம்... சட்டரீதியான நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!

அதன்படி இந்த ஹேக் சேனல்களில் சில சேனல்களின் உரிமையாளர்கள் சார்பாக யூடியூப் தளத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக நடந்த இந்த ஹேக்கிங் குறித்து அறிந்த ரசிகர்கள் வருத்ததில் இருந்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

Tamil Mint

பலன் தரும் பனை, புயலை தாங்கும் பலம்

Tamil Mint

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்.!

suma lekha

மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!

sathya suganthi

இறுதிகட்ட தேர்தல் பணியில் ஐ-பேக்! அனல் பறக்கும் திமுக பிரச்சாரம் கைகொடுக்குமா?

Bhuvaneshwari Velmurugan

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

mani maran

“கொரோனா பாசிடிவ்” முறைகேடு – தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

sathya suganthi

வலிமை குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர்…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree