a

ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் குரானில் உள்ள ஒரு வாசகத்தை பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பினர். ஆனால், யுவன் அந்த கேள்விகளுக்கு சாந்தமான முறையில் பதில் அளித்துள்ளார்.

அதில் ஒரு நெட்டிசன், “நீங்கள் யுவன் சங்க ராஜாவாக பிறந்ததால் தான் உங்களை நாங்கள் பின் தொடர்கிறோம். இது மதத்தை பரப்பும் தளம் இல்லை. இதே ரீதியில் சென்றால் உங்கள் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறியிருந்தார். இதற்கு யுவன் சங்கர் ராஜா “வெளியேறி விடுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

இன்னும் ஒரு நெட்டிசன் “இதே கருத்தை நீங்கள் பகவத் கீதையில் பார்க்கவில்லையா” என்று கேட்டதற்கு “நான் நம்பும் ஒரு மதம் குறித்து பதிவு செய்வது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவதாகவும். நாங்களும் தனிமனிதர்கள் தான். எங்களுக்கு உரிமைகள் உள்ளன. என் நம்பிக்கை என் உரிமை” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், இன்னொரு நெட்டிசன் “புதிய மதத்திற்கு மாறிய நீங்கள் ஏன் பழைய பெயரை பயன்படுத்துகிறீர்கள் உங்கள் பெயரையும் மாற்றிக் கொள்ளலாமே?” என கேட்டுள்ளார்.

Also Read  பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’... செம்ம குஷியில் ரசிகர்கள்...!

அதற்கு யுவன்சங்கர்ராஜா “உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் முதலில் நான் ஒரு இந்தியன். அதன் பின்னர் நான் ஒரு தமிழன் அதன்பிறகு நான் ஒரு இஸ்லாமியன்.

இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அது உங்களுடைய அறியாமை. மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை.

Also Read  நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

இந்த அடிப்படை விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள அவர்களுக்கு வேறு எதுவும் புரியாது. தயவுசெய்து வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்துங்கள். அமைதி நிலவட்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு யுவன் புத்திசாலித்தனமாகவும் சாந்தமாகவும் பதில் அளித்துள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

Also Read  'மாஸ்டர்' பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சின்னத்திரை ‘நாயகி’ நக்‌ஷத்ரா நாகேஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Tamil Mint

“பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்” – கவிஞர் வைரமுத்து

Lekha Shree

நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Bhuvaneshwari Velmurugan

புது லுக்கில் கலக்கும் ஃபிட் அஜித், ரசிகர்கள் உற்சாகம்

Tamil Mint

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் பிரபல இசையமைப்பாளர்! தேதி அறிவிப்பு குறித்த சூப்பர் அப்டேட்!

Tamil Mint

காதலருடன் ஈஸ்டரை கொண்டாடிய நயன்தாரா – காதல் மொழி பேசும் ரொமான்டிக் போஸ்…!

Devaraj

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபஹத் ஃபாசில்!!அதிர்ச்சியில் ரசிகர்கள்..

HariHara Suthan

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!

Devaraj

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுத்த சாணிக்காகிதம் டீம்! நன்றி சொன்ன செல்வராகவன்!

HariHara Suthan