a

“தோனிக்கு முன் என்னை கேப்டன் ஆக்குவார்கள் என நினைத்தேன்” – மனம் திறந்த யுவராஜ் சிங்


2007ம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியை மீட்டெடுக்கவும் தொடக்க டி20 உலகக் கோப்பைக்கான கேப்டனாக புதிதாக ஒருவரை அறிவிக்கவும் பிசிசிஐ முடிவெடுத்தது.

அந்த நேரத்தில் தோனிக்கு முன்பாக தனக்கு கேப்டன்சி அளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அப்போதுதான் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் போட்டியில் தூவி அடைந்திருந்தோம்.

இந்திய கிரிக்கெட்டின் குழப்பம் நிறைந்த காலகட்டம் அது. அதன் பிறகு இரண்டு மாத கால இங்கிலாந்து பயணம் இடையே தென்னாப்பிரிக்கா, அயர்லாந்துக்கு ஒரு மாத கால பயணம். இதோடு டி 20 உலக கோப்பையும் இருந்தது.

Also Read  சென்னையா - மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?

அதாவது தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் இந்தியாவில் இருந்து வெளியே இருக்க வேண்டும். எனவே அப்போது மூத்த வீரர்கள் பிரேக் எடுத்துக்கொள்ள நினைத்தார்கள்.

டி20 உலக கோப்பை தொடரை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. டி20 தொடரில் எனக்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தோனி கேப்டன் என்று அறிவிக்கப்பட்டது.

Also Read  உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? - ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

ஆனால், யார் கேப்டனாக இருந்தாலும் நன் என் 100 சதவீதம் தர தயாராக இருந்தேன். அது ராகுல் திராவிட் ஆக இருந்தாலும் சரி கங்குலியாக இருந்தாலும் சரி. அணிக்கான வீரராக இருக்கவே விரும்பினேன்.

அப்போது கங்குலி, திராவிட், சச்சின் ஓய்வு எடுத்துக் கொண்டனர். ஜாகீர் கான் என்னையும் ஓய்வு எடுக்கச் சொன்னார்.

முதல் ஆட்டம் வெஸ்ட் இண்டீசுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே இருந்தது. கிறிஸ் கெயில் 50-55 பந்துகளில் சதமடித்தார். அன்று இரவு எனக்கு ஜாகீர் கான் மெசேஜ் செய்தார்.

“நான் தொடரில் இருந்து ஓய்வு எடுக்க அனுமதி கிடைத்தது” என்று எனக்கு மெசேஜ் அனுப்பினார். ஆனால், கோப்பையை வென்றவுடன் அவரே “நான் ஓய்வு எடுத்து இருக்கக் கூடாது” என்றார்.

Also Read  கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

இளம் கேப்டனின் கீழ் இளம் அணியாக இருந்தோம். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. டி20 கிரிக்கெட் உத்தி பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு தெரிந்த பாணியிலான விளையாட முடிவெடுத்தோம்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது – தொடரும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

Devaraj

ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள்!

Devaraj

தோனி குறித்து சி எஸ் கே எடுத்த சூப்பர் முடிவு

Tamil Mint

31 பந்துகளில் 70 ரன் – நியூசிலாந்தை வெச்சு செஞ்ச ரியல் பவர் ஹீட்டர் கிளன் மேக்ஸ்வல்

Jaya Thilagan

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

ஷாக் கொடுத்த தோனி அவுட்!

Tamil Mint

சென்னை 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

Tamil Mint

சாதனை படைப்பதே என் இலக்கு – பவானி தேவி திட்டவட்டம்…!

Devaraj

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

Jaya Thilagan

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

100 மில்லியன்: முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி!

Jaya Thilagan