“God decides your Destiny!” – தனது கம்பேக் குறித்து அறிவித்த யுவராஜ் சிங்..!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஓய்வை முடித்துக்கொண்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் களத்தில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராமில், “கடவுள் தான் உங்கள் தலைவிதியை தீர்மானிக்கிறார்! பொது கோரிக்கையின் பேரில் நான் பிப்ரவரியில் ஆடுகளத்திற்கு வருவேன் என்று நம்புகிறேன்! இந்த உணர்வு போல் வேறேதுமில்லை!

Also Read  உலகக்கோப்பை டி20 யில் மேட்ச் பிக்சிங் - வாழ்க்கையை இழந்த கிரிக்கெட் வீரர்கள்

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். அது எனக்கு மிகவும் முக்கியம்! இந்தியாவை தொடர்ந்து ஆதரிக்கவும். இது எங்கள் அணி. உண்மையான ரசிகர்கள் கடினமான காலங்களில் தங்களின் ஆதரவை வெளிப்படுத்துவர்” என குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் 2011 உலகக் கோப்பை போட்டியில் ஆட்ட நாயகன் பட்டத்தை வென்றார். யுவராஜ் 362 ரன்கள் குவித்து 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

Also Read  டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி…!

யுவராஜ் 2011 உலகக் கோப்பையில் தனது வாழ்க்கையின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார். ஆனால் 2011 உலகக் கோப்பை முடிந்த சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுவதுமாக மீண்ட நிலையில், சில உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்.

Also Read  இந்தியா-நியூசி., டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ்..!

யுவராஜ் கடைசியாக மார்ச் 2021 இல் சாலை பாதுகாப்பு தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது தனது கம்பேக் குறித்து அறிவித்துள்ளது இவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல பேச்சாளர் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்.!

mani maran

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

sathya suganthi

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

sathya suganthi

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

sathya suganthi

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

அதிகரிக்கும் கொரோனா – முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

Lekha Shree

ஜியோ-கூகுள் கூட்டணியில் விற்பனைக்கு வருகிறது மலிவு விலை ஸ்மார்ட்போன்..!

Lekha Shree

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

2-வது மனைவிக்காக முதல் மனைவியை கொன்ற கணவர் கைது: என்னத்த சொல்ல…!

mani maran

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் – கழற்றிவிடப்பட்டாரா நடராஜன்?

Devaraj

டோக்யோ ஒலிம்பிக்: இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

Lekha Shree