சம்பளம் தரவே இல்லைங்க…! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்…!


ஜாம்பியா நாட்டில் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றின் செய்தி வாசிப்பாளர், தனக்கு அந்த செய்தி நிறுவனம் ஊதியம் தராததை நேரலையில் குமுறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நேரலையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடப்பாண்டு.

மேலும் நியூஸை லைவில் கவர் செய்திருக்கும் போதே சில செய்தி வாசிப்பாளர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.

சில பெண்கள் குழந்தைகளுக்கு நேரலையில் பாலூட்டியுள்ளார்கள்.

ஆனால் ஜாம்பியா நாட்டில் கேபிஎன் தொலைக்காட்சி சேனல் செய்தி வாசிப்பாளர் நேரலையில் சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேபிஎன் சேனலின் நியூஸ் வாசிப்பாளர் கன்டின்டா கலிமினா. இவர் கடந்த சனிக்கிழமை மாலை முதலில் தலைப்பு செய்திகளை வழக்கம்போல் வாசித்து முடித்தார்.

அதன் பின்னர் கேபிஎன் சேனல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நேரலையின் போதே முன் வைத்தார்.

தனக்கும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதுவரை நிர்வாகம் ஊதியமே வழங்கவில்லை என்றும் இந்த உலகில் உள்ள எல்லாரும் பணம் சம்பாதிப்பதற்காகவே பணியாற்றி வருகிறார்கள் என்றும் கூறினார்.

செய்திகளை தவிர்த்துவிட்டு பார்த்தோமேயானால் தாங்களும் மனிதர்கள்தான் என்றும் தங்களுக்கும் ஊதியம் என்பது வழங்க வேண்டும் என பேசினார் என்றும் கலிமினா தெரிவித்தார்.

இதையடுத்து அதை டெலிட் செய்வதற்காக சேனலுக்கு நிர்வாகம் பிரேக் கொடுத்தது. எனினும் கனின்டா அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

குடித்துவிட்டு செய்தி வாசித்ததால் கனின்டா உளறியுள்ளார் என இதுகுறித்து கேபிஎன் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி கென்னடி மேசா தெரிவித்துள்ளார்.

Also Read  ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வைரக் கற்கள்’ – வதந்தியை நம்பி ஏமாந்த மக்கள்…!

Lekha Shree

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

Shanmugapriya

அமெரிக்கா: அதிபர் டிரம்ப் கொரோனா நிவாரணத்திற்கு ஒப்புதல்

Tamil Mint

இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

Lekha Shree

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்

sathya suganthi

ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..

Ramya Tamil

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் கையாண்ட வினோத யுக்தி இணையத்தில் வைரல்!

Tamil Mint