‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் ‘Survivor’..! தொகுப்பாளர் இவரா?


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ‘Survivor’ என்ற நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

விஜய் தொலைக்காட்சியில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்களை முடித்துள்ளது. மேலும், விரைவில் 5வது சீசன் தொடங்க ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி ‘Survivor’ என்ற நிகழ்ச்சியை துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஒரு தீவுக்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.

அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இதில் போட்டியாளர்கள் இயற்கையின் ஆற்றலுக்கு எதிராக தங்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

Also Read  நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளியான அப்டேட்…!

உடல் வெப்பத்திற்காக தீ மூட்டுவது, இயற்கைப் பொருட்களைக் கொண்டு குடில் அமைப்பது உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியங்களைத் தேடிப் பெறுவது உள்ளிட்ட சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

இந்த போட்டியானது போட்டியாளர்களின் மன மற்றும் உடல் வலிமையை சோதிக்கும் விதமாக அமையும் என கூறப்படுகிறது.

Also Read  விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை என்றால் அர்ஜுன் தொகுப்பாளராக அறிமுகமாகும் முதல் நிகழ்ச்சி இதுவாக அமையும்.

தனது உடலமைப்பில் தீவிர கவனம் செலுத்தும் அர்ஜுன் இந்நிகழ்ச்சிக்கு தகுதியானவராக இருப்பார் என்பதால் அவரை தொகுப்பாளராக தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read  'பிக் பாஸ்' சீசன் 5 ஷூட்டிங் ஆரம்பம்? போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக நந்தா, விக்ராந்த், விஜயலட்சுமி, வி.ஜே.பார்வதி, இந்திரஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டாலும் இன்னும் போட்டியாளர்கள், தொகுப்பாளர் உள்ளிட்ட விவரங்களை தொலைக்காட்சி நிறுவனம் அறிவிக்கவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

கொரோனாவுக்கு நடுவே சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்த காஜல் அகர்வால்…!

Lekha Shree

3 ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் லிங்குசாமி! – யார் ஹீரோயின் தெரியுமா?

Lekha Shree

‘அண்ணாத்தா’ போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

அண்ணாத்த தியேட்டர் உரிமையை வாங்கிய உதயநிதி? – வெளியான மாஸ் தகவல்..!

suma lekha

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ரஜினியின் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு?

Lekha Shree

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு…!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

Lekha Shree