புத்தாண்டில் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்ட ஆணுறைகள்…! Zomato நிறுவனர் வெளியிட்ட தகவல்…!


புத்தாண்டிற்கு முந்தைய நாள் சுமார் 33,000 ஆணுறைகள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டு விற்கப்பட்டதாக சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாகவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் நெருக்கடிகள் இருந்தபோதிலும் இந்த ஆண்டு புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Also Read  வேகமாக பரவும் கொரோனா - கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

குறிப்பாக உலக நாடுகளில் புத்தாண்டை மக்கள் ஆரவாரமாக வரவேற்றனர். இந்த நிலையில் இந்தியாவின் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் புத்தாண்டுக்கு முந்தைய நாள் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் தளமான பிளின்கிட்டில் புத்தாண்டுக்கு முந்தின தினம் மட்டும் 33,440 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

மேலும், அதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 குளிர்பானங்கள், 6,712 ஐஸ்கிரீம் டப்பாக்கள், 28,240 பாப்கார்ன் பொட்டலங்கள் என அந்த ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

Also Read  சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

மேலும், 10,000 கொரோனா சுய பரிசோதனை கருவிகளும் விற்பனையாகியுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7 மணி வரையிலும் சொமேட்டோவுக்கு ஒரு நிமிடத்திற்கு 7,100 ஆர்டர்கள் வந்ததாக அதன் நிறுவனர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

73-வது குடியரசு தினம்: விமானப்படையின் அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் போர் விமானி..!

Lekha Shree

வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை – அதிரடி அறிவிப்பு

Devaraj

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: என்ன நடந்தது.?

mani maran

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது.

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Mint

செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு புதிய விதி அறிவிப்பு…!

Lekha Shree

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 1 மணிநேரம் வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்!

Lekha Shree

கான்பூர் டெஸ்ட்: இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்..!

Lekha Shree

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan